மலையகத்தில் உள்ளுராட்சிமன்ற தேர்தல்களின் போது இளைய சமுதாயத்திற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுமா?

0
138

வெகு விரைவில் உள்ளுராட்சி மன்ற தேர்தல்தல்கள் இடம்பெற உள்ளாத அறியமுடிகின்றது.இவ்வாரத்தில் நாட்டின் முக்கிய இரு கட்சிகளான ஐ.தே.கா,ஐ.ம.சு.க ஆகியவற்றின் மத்திய செயற்குழு கூட்டங்கள் இடம்பெற்ற நிலையில் விரைவாக உள்ளுராட்சி மன்ற தேர்தல்களை நடாத்துவதற்கான தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளது..

இம்முறை உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் புதிய முறையிலான தேர்தலா? பழைய முறையிலான தேர்தலா? என்பது இன்னும் தீர்மானம் எடுக்காத நிலையில்.பெரும்பாலும் புதிய முறையிலான விகிதாசார அடிப்படையிலான தொகுதிவாரி தேர்தல் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றது.இவ்வாறான முறையில் தேர்தல் இடம்பெறும் போது போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

மலையகத்தை பொருத்தவரையில் கடந்த காலங்களின் தேர்தல்களின் இளைஞர்கள்,பெண்களுக்கான சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டது குறைவு.பெரும்பாலும் கட்சிகளின் விசுவாசிகள்,கட்சியோடு நெருக்கமானவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டு வந்த நிலையில் இனிவரும் தேர்தல்களின் போது இளைய சமுதாயத்தின் புரட்சிக்காக இளைஞர் யுவதிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கி எதிர்காலத்தில் சிறந்த தலைமைகளை உருவாக்க எத்தனை அமைப்புகள்,எத்தனை கட்சிகள் தாயாராக உள்ளன?

ஏற்கனவே தாயர்படுத்தப்பட்ட கடந்த கால விசுவாசிகளுக்கு தேர்தர்களிள் போட்டியிட சப்தர்ப்பம் வழங்கப்பட்டு தற்போதைய இளைஞர்களுக்கு சந்தர்ப்பம் இல்லாமல் செய்ப்படுமா?அல்லது எதிர்காலத்தில் மலையகத்தை வழிநடத்தகூடிய சிறந்த தலைமைகள் உருவாக்க தற்போதைய இளைஞர்களுக்கு தேர்தல்களின் போது போட்டியிட சந்தர்ப்பம் வழங்கப்படுமா?

கடந்த காலங்களிள் கட்சிகளின் தலைமை, உயர்பிடம் தெரிவு செய்த வேட்பாளர்கள் மக்கள் மனங்களை திருப்திபடுத்த முடியாமல் தோல்விகளை சந்தித்தனர்.தற்போதைய அரசியல் சூழல்,தொடர்பாடல் வசதிகள்,சமுகவலைத்தளம் என்பனவற்றின் ஊடக மக்கள் சிறந்த தெளிவினை பெற்று எதிர்காலத்தில் சிறந்த ஆட்சியாளர்கள்,சிறந்த தலைமைகள் உருவாக வேண்டும் என்ற எதிர்பார்ப்புடனும் தற்போதைய அரசியலில் மலையகத்தில் மாற்றம் தேவை,மலையகத்திற்கு ஏற்ற அமைப்புகளும்,மலையக மக்களுக்கு ஏற்ற தலைமைகள் ஆட்சி அதிகாரங்களிள் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்பில் மக்கள் காத்திருக்கினறர்.இவ்வாறன சந்தர்ப்பத்தில் மக்கள் அங்கிகாரம் வழங்கி,மக்கள் ஏற்று தெரிவு செய்யக்கூடிய இளைஞர்கள்,பெண்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.
வெறுமனே சிலரின் திருப்திக்காக மக்கள் ஏற்றுக்கொள்ளாத,மக்கள் அங்கிகாரம் வழங்க மறுக்கும் நபர்களை வேட்பாளார்களாக களமிறக்குவதை தவிர்த்து தற்போதை சூழலுக்கு ஏற்ற இளைய சமுதாயத்தினர் மலையகதின் சிறந்த தலைமைகளாக உருவாக்கப்பட வேண்டும்.

எல்.ராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here