அட்டன் சலன்கந்த பிரதான வீதியில் ஏற்பட்டுள்ள மண்சரினால் அதிகாலை முதல் அவ் வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்மலையகத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளதுடன் பல பகுதிகளில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளது
அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் சலங்கந்த வீதியின் எட்லி பகுதியிலே 03.08.2018 அதிகாலை மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன் குறித்த வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ள நிலையில் நகருக்கு செல்லும் பாடசாலை மாணவர்களும் பயணிகளும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
பிரதான பாதையிலுள்ள மண்னை அகற்ற நோர்வூட் பிரதேச சபையூடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதேசபை உறுப்பினர் மு.இராமச்சந்திரன் தெரிவித்தார்.



