மலையகத்தில் சீர்ற்ற காலநிலையால் மரமொன்று முறிந்து விழுந்தத்தில் பெண் தொழிலாளி பலி

0
263

தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண் தொழிலாளி, தேநீர் பருகிக்கொண்டிருந்த போது, மரமொன்று முறிந்து விழுந்தத்தில் அத்தொழிலாளி மரணமடைந்துள்ளார்.
அவ்விடத்தில் இருந்த மற்றுமொரு தொழிலாளி கால் முறிந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விரு பெண் தொழிலாளிகள் மட்டுமே அவ்விடத்தில் இருந்து தேநீர் அருந்திக்கொண்டிருந்துள்ளனர்.
இந்த சம்பவம், வத்தேகம, மடுகலை நெல்லிமலைத் தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை (04) இடம்பெற்றுள்ளது. வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியிலேயே அத்தொழிலாளி மரணமடைந்துள்ளார்.

நான்கு பிள்ளைகளின் தாயான, சண்முகம் விஜயலட்சுமி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.அந்தப் பிரதேசத்தில் காலையில் இருந்து காற்று சீறி,சீறி வீசுவதுடன், கடும் மழை பெய்துள்ளது. வெளியில் தலையைக் காட்டாதவகையில் மழை பெய்துள்ளது. நிலைமையை விளங்கிக்கொண்ட பெற்றோர், நெல்லிமலை சிவனேஸ்வரா வித்தியாலயத்துக்கு வருகைதந்து, தங்களுடைய பிள்ளைகளை இடைநடுவிலேயே வீடுகளுக்கு அழைத்துச் சென்றுவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here