மலையகத்துக்கான இந்திய அரசின் 10 ஆயிரம் வீட்டுத்திட்டம் வெகு விரைவில் ஆரம்பிக்கப்படும் –

0
155

ஊவா மாகாணத்துக்கான முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை வெற்றிகரமாக ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஜீவன் தொண்டமான் மேலும் கூறியவை வருமாறு,

“ மக்களுக்கு சேவை செய்யவே நான் அரசியலுக்கு வந்துள்ளேன். எனவே, மாலை, பொன்னாடைகள் வேண்டாமென ஏற்கனவே கூறியுள்ளேன். ஆகவே எனக்காக கொண்டுவந்த மாலைகளை அப்படியே கோவிலுக்கு கொண்டுசென்று சாமிக்கு அணிவித்து ஆசிபெறுங்கள். எமது தலைவர் ஆறுமுகன் தொண்டமானுடன் தோளோடு தோள் நின்று பதுளையில் சேவல் கொடியை ஏற்றிய அனைத்து சொந்தங்களுக்கும் நன்றி.

இன்றைய கூட்டத்துக்கு இதொகா தலைவர் செந்தில் தொண்டமான், தவிசாளர் ரமேஷ் ஆகியோரும் வர இருந்தனர். தேர்தல் பிரச்சாரத்தால் அவர்களால் வரமுடியாமல்போனது. நாம் அனைவரும் ஒரு தாயின் பிள்ளைகள். ஒரே குடும்பம். ஆகவே, ஒன்றாக முன்னோக்கி பயணிப்போம்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் உள்ளூராட்சிசபைத் தேர்தல் அவசியமா? அதனால் மாற்றம் ஏதும் ஏற்படுமா? தேர்தல் முடிவுகள் வந்த பிறகு ஜனாதிபதியாக ரணிலே இருப்பார். பிரதமராக தினேஷ் குணவர்தனவே செயற்படுவார்.

அமைச்சரவையிலும் மாற்றம் வராது.  நான் தேர்தலுக்கு எதிரானவன் அல்லன். தேர்தலொன்று நடைபெறுமானால் அது ஜனாதிபதி தேர்தலாகவே இருக்க வேண்டும்.

கோட்டாபய ராஜபக்ச பதவி விலகிய பின்னர், சஜித், ரணில் என இருவருக்கும் பதவியேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் சவாலை ஏற்றால் அரசியல் எதிர்காலம் இல்லாது போய்விடும் என்பது இருவருக்கும் தெரியும். சஜித் பின்வாங்கினார். ரணில் சவாலை ஏற்றார். நாட்டில் 6 மாதங்களுக்கு முன்னர் இருந்த நிலைமை தற்போது இல்லை. அதேபோல ஒரே இரவில் மாற்றத்தை ஏற்படுத்திவிடவும் முடியாது. உடைப்பது இலகு. கட்டுவதுதான் கஷ்டம். இந்தியா உட்பட பல நாடுகள் உதவிவருகின்றன. சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் கிடைப்பதற்கு நிதி உத்தரவாதம்கூட வழங்கப்பட்டுள்ளது.

நெருக்கடியான கட்டங்களில் பதுளை மாவட்டமும் காங்கிரஸை தோளில் சுமந்துள்ளது. அந்த மண்ணை மறக்கமாட்டோம். தேர்தல் பிரச்சாரத்தை, எவரையும் கொச்சைப்படுத்தும் வகையில் முன்னெடுக்காமல், நாகரீகமாக முன்னெடுங்கள். “ – என்றார்.

க.கிஷாந்தன்

ஊடக செயலாளர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here