மலையகப்பகுதியில் மீண்டும் சீரற்ற காலநிலை தோன்றியுள்ளது. எங்கு பார்த்தாலும் பனி மூட்டத்துடன் மழையும் பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஹட்டன், நுவரெலிய வீதிகளில் வாகனம் செலுத்துவோர் மிக அவதானமாக செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் வாகன சாரதிகளுக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர்.