இன்று இந்த நாட்டிலே 2024 ம் ஆண்டு பாரிய அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ள இதில் மலையகப்பகுதியில் விடுபட்ட அனைத்து அபிவிருத்தியும் கௌரவ தலைவர் ஜீவன் தொண்டமான் தலைமையில் முன்னெடுப்பதற்கான வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுத்து வருவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவரும் முன்னாள் நுவரெலியா பிரதேச சபையின் உபதலைவருமான சச்சிதா நந்தன் தெரிவித்தார்.
அக்கரபத்தனை மன்ராசி நகரில் இன்று (17) ம் திகதி கெப்பரிகன் சர்வதேச பாடசாலையில் நடைபெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு பிரத்தியேகமாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்.
இந்தியவின் நிதியுதவியுடன் மலையகத்தின் நாம் 200 நிகழ்வில் இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா நீத்தாராமன் கானொளி ஊடாக இந்திய வீடமைப்பு திட்டத்தினை ஆரம்பித்து வைத்தார்.அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் அந்த வீடமைப்பு திட்டத்தினை ஆரம்பிப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அடுத்த வாரம் ஆரம்பிப்பதற்கான வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதே நேரம் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இரண்டு முறை அடிக்கல் நாட்டப்பட்டு கைவிடப்பட்ட டயகம லிந்துலை பிரதான வீதி மன்ராசி ஹட்டன் போடைஸ் ஊடான பிரதான வீதிகள் இரண்டும் ஜனவரி மாதம் ஆரம்பிப்பதற்கான நிதி இன்று திரைசேரிக்கு வந்திருக்கின்றது. அதன் அபிவிருத்தி பணிகள் மீண்டும் ஆரம்பித்து நிறைவு செய்யப்படும் இந்த வேலைத்திட்டங்கள் கௌரவ அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரமேஸ்வரன் அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்படும் என தெரிவித்த அவர். நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினை தீர்ப்பதற்கு சர்வதேச நாணய நிதியம் நிதியினை வழங்கியுள்ளது. இந்நிலையில் கடன் தவணைக் கட்டணங்களையும் செலுத்த வேண்டும் எமது நாட்டில் உள்ளுர் உற்பத்தியும் அதிகரிக்கப்படவில்லை ஆகவே வரி விதிப்பதனை தவிர வேறு வழி கிடையாது இந்த வரி விதிப்பு மேற்கொள்ளாவிட்டால் நாடு இதை விட மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு மேலும் மக்கள் கடந்த காலத்தினை விட கஸ்ட்டப்பட வேண்டிய நிலை ஏற்படும்.
அதே போல் தான் இன்று தொழிலாளர்களின் சம்பள விடயம் ஆயிரம் ரூபா போதாது என்ற நிலைக்கு மலையக மக்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள விலைவாசி காரணமாக மக்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் எனவே இவர்களுக்கு இரண்டு மூன்று பொறிமுறைகளில் நியாயமான சம்பளத்தினை பெற்றுக்கொடுப்பதற்கு இலங்கை தொழலாளர் காங்கிரஸ் கம்பனிகளுடன் பேசுதற்கு ஆயத்தமாகியுள்ளது அதே நேரம் நாட்டின் ஜனாதிபதி கம்பனிகளை அழைத்து 1700 ரூபா சம்பளம் வழங்க முடியுமா என கேட்டிருந்தார் ஆகவே விடுபட்ட அபிவிருத்திகள், சம்பள பிரச்சினை உட்பட அனைத்து விடயங்களுக்கும் 2024 ஆண்டு முடிவுக்கு வரும் என அவர் மேலும் தெரிவித்தார்.
கெப்ரிகன் சர்வதேச பாடசாலையின் மாணவர்களுக்கு விருது விழங்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் ஜெயசத்தியவாணி தலைமையில் நடைபெற்றது. அதில் பிரதேசத்தைச் சேர்ந்த முக்கியஸ்த்தர்கள் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டதுடன் மாணவர்களுக்கு சான்றிதழ் விருது மற்றும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
இதில் மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந் நிகழ்வுக்கு அரச பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள்,பெற்றோர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மலைவாஞ்ஞன்




