கனடா மத்திய அரசு புதிய உணவுப் பாதுகாப்புத் திட்டம் (food security strategy) ஒன்றை வெளியிட்டுள்ளது.
கனடாவின் மளிகைப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பெரிய நிறுவனங்களுக்கு இணையாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான மளிகைக் கடைகளும் போட்டியிடும் வகையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உணவுப் பொருட்கள் கொள்முதல், விநியோகம் மற்றும் போக்குவரத்து முறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி, அடுத்த பத்து ஆண்டுகளில் $3 பில்லியன் டொலர் நிதியுதவி வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
தற்போது கனடாவின் மளிகைப் பொருட்கள் சந்தை மற்றும் விநியோக அமைப்பின் 75 சதவீதத்தை வெறும் 5 பெரிய நிறுவனங்களே கட்டுப்படுத்தி வருகின்றன.
இதனால் ஓட்டாவாவில் (Ottawa) உள்ள ‘ஃபார்மர்ஸ் பிக்’ (Farmer’s Pick) போன்ற சுயாதீனக் கடைகளின் உரிமையாளர்கள் (Alfonso Curcio) இப்போட்டித் திட்டத்தை வரவேற்றுள்ளனர்.
“மளிகைக் கடைகளில் போட்டி அதிகரிக்க வேண்டும், நாங்கள் செலுத்தும் பணம் குறைய வேண்டும்” என நுகர்வோர் இந்தத் திட்டத்தை வரவேற்றுள்ளனர்.
மறுமுனையில், விநியோக மையங்களுக்கான செலவுகள் புதிய வரிகள் மூலம் மக்கள் மீது திணிக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
கனடா சுதந்திர மளிகைக் கடைக்காரர்களின் கூட்டமைப்பு (Gary Sands) இத்திட்டத்திற்கு ஆதரவளித்துள்ளது.
இருப்பினும் அரசின் முந்தைய வாக்குறுதிகளால் விலைகள் குறையவில்லை என கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பியர் பொலிவியர் (Pierre Poilievre) இத்திட்டத்தை விமர்சித்துள்ளார்.
கனடா மக்கள் மளிகைப் பொருட்களின் விலையேற்றத்தால் தொடர்ந்து சிரமங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், இந்தத் திட்டம் நீண்டகால நோக்கில் விலைகளைக் குறைக்க உதவும் என அரசு நம்புகிறது.




