மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான பிரவுன்சிக் தோட்டத்தில் பிரவுன்சிக் பிரிவில் சுமார் 250 குடும்பங்கள் குடிநீரின்றி பெரும் அவதிப்படுவதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
குறித்த தோட்ட மக்களுக்கு தேவையான குடிநீர் நீரோடையிலிருந்து தோட்ட நிர்வாகம் பெற்று நீர் பம்பி ஊடாகவே பெற்றுக்கொடுக்கப்பட்டு வருகின்றனர். தற்போது மலையக பகுதியில் நிலவி வரும் வரட்சியான காலநிலையினையடுத்து நீருற்றுக்கள் வற்றிப்போய் உள்ளன.இதனால் பெரும்பாலானவர்கள் குடிநீருக்காக பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
குறித்த தோட்டத்தில் வாழும் பொது மக்களுக்கு தேவையான குடிநீரினை தோட்ட நிர்வாகத்தின் மூலம் பெற்றுக்கொடுக்கப்பட்டு வந்த போதிலும் அடிக்கடி குறித்த தண்ணீர் பம்பி அடிக்கடி பழுதடைந்து விடுவதாகவும் இதனால் குறித்த தோட்டத்தில் வாழும் பொது மக்கள் கடந்த 30 வருட காலமாக குறித்த பிரச்சினைக்கு முகம் கொடுத்து வருவதாகவும். இவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த தண்ணீர் பம்பி பழுதடையும் போது தோட்ட நிர்வாகத்தினால் தண்ணீர் பவுசர் மூலம் தண்ணீர் பெற்றுக்கொடுப்பதாகவும் அவ்வாறு பெற்றுக்கொடுக்கும் நீர் போதுமானதாக இல்லை என்றும் இவர்கள் தெரிவிக்கின்றனர். குறித்த தண்ணீர் பம்பி உரிய முறையில் செய்யாததன் காரணகவும்,அதனை திருத்தி அமைப்பதற்கு காலம் தாழ்த்தப்படுவதனால் இங்கு வாழும் பொது மக்கள் பலவிதமான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே இது குறித்து நிரந்தர தீர்வினை பெற்றுக்கொடுக்குமாறு பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இதே வேளை குறித்த குடிநீர் அசுத்த நீர் கலந்திருப்பதாகவும் எவ்வித பாதுகாப்பும் அற்ற முறையில் எவ்வித பரிசோதiயும் இன்றி குடிநீர் பெற்றுக்கொடுக்கப்பட்டு வருவதாகவும் இவர்கள் கவலை தெரிவிப்பதும் குறிப்பிடத்தக்கது.
மலைவாஞ்ஞன்