மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை கல்தோனி பகுதியில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்களுடன் சந்தேக நபரொருவரை (21) இரவு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
மஸ்கெலியா பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து குறித்த சந்தேக நபர் தங்கியிருந்த தற்காலிக கூடாரத்தினை சோதனையிட்ட போது உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் இங்கிரிய குதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என தெரியவருகிறது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ஹட்டன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மஸ்கெலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.