மஸ்கெலியாவில் நபரொருவர் மீது தாக்குதல் ; சந்தேக நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி ஆர்பாட்டம்!

0
1

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாமிமலை நகரில் நபரொருவர் தாக்குதலுக்கு உள்ளான விடயத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து பிரதேச மக்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் சாமிமலை நகரில் இன்று திங்கட்கிழமை (04) ஆர்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

தாக்குதலுக்குள்ளானவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.

இவர் தற்போது சிகிச்சைக்காக டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர் கவரவில தோட்டத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை உடனடியாக கைது செய்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here