மஹிந்த ராஜபக்ச பெரும்பான்மை வாக்குகளால் வெல்வார்

0
215

70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்காளர்களைக் கொண்டுள்ளதால் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன எந்தத் தேர்தலிலும் வெற்றி பெறும் என முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

”SLPP உறுப்பினர்களால் மீண்டும் ஒருமுறை வெல்ல முடியாது என்று பலர் கூறினர். கடந்த ஆண்டு நாங்கள் தாக்கப்பட்ட பிறகு பலரது எண்ணம் இதுதான். எவ்வாறாயினும் 70 வீதத்திற்கும் அதிகமான வாக்காளர்களில் எம்மால் எம்மை மறுசீரமைக்க முடிந்துள்ளது” என பொல்கஹவெலவில் நடைபெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

”குருநாகல் மாவட்டத்தில் 200,000 இற்கும் அதிகமான பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று SLPP வெற்றி பெறும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அதிகளவான விருப்பு வாக்குகளைப் பதிவு செய்வார். குறைந்தது 11 SLPP உறுப்பினர்கள் குருநாகல் மாவட்டத்திலிருந்து பாராளுமன்றம் செல்வார்கள்” என அவர் மேலும் தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here