மஹிந்த ராஜபக்ஷ சவால் சம்பியன்ஷிப் கிரிக்கட் சுற்றுப்போட்டி

0
210

மஹிந்த ராஜபக்ஷ சவால் சம்பியன்ஷிப் கிரிக்கட் சுற்றுப் போட்டி நேற்று (12) நுவரெலியா மாநகர சபை விளையாட்டு மைதானத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.

வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் கிரிக்கெட் சுற்றுப்போட்டி முன்னாள் ஜனாதிபதியும் முன்னாள் பிரதமருமான பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இவ்வருடம் இடம்பெற்றது.

மஹிந்த ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட, நுவரெலியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அனுருத்த ஹக்மான உள்ளிட்டோர் கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்டனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த போட்டியில் பங்குபற்றுவதற்காக கலந்துகொண்டனர்.

இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் இரண்டு போட்டிகள் இடம்பெற்றதுடன் இரண்டு போட்டிகளிலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அணி வெற்றிபெற்றுள்ளது.

போட்டியின் நாயகனாக நாடாளுமன்ற உறுப்பினர் கயாஷானும், சிறந்த காப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் சி.பி.ரத்நாயக்கவும், சிறந்த துடுப்பாட்ட வீரராக நாடாளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.டி.வீரசிங்கவும், சிறந்த பந்துவீச்சாளராக பிரேமலால் ஜயசேகரவும் தெரிவு செய்யப்பட்டனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here