மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீக்கம்

0
222

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டை எதிர்வரும் 31 ஆம் திகதி அதிகாலை 04 மணியுடன் நீக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் (29) இடம்பெற்ற கொவிட் – 19 ஒழிப்பு செயலணியின் கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களின் முதலாம் ஆண்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை விரைவில் ஆரம்பிப்பது தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

தடுப்பூசியை ஏற்றிக் கொள்ளாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்றுக் கொள்ளவுள்ளதாக இன்றைய கூட்டத்தின் போது சுகாதார அதிகாரிகள் ஜனாதிபதியிடம் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here