மாணவனின் செவியை பதம் பார்த்த ஆசிரியர்

0
204

வலிகாம வலயத்துக்கு உட்பட்ட சுழிபுரம் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 6ல் கல்வி கற்கும் மாணவனின் கன்னத்தில் ஆசிரியர் அறைந்ததில் மாணவனின் செவிப்பறை பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில் மாணவன் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

குறித்த மாணவனுக்கு பாடசாலை ஆசிரியர் கடந்த 31 ஆம் திகதி பாடசாலையில் வைத்து தாக்கியுள்ளார். இந்நிலையில் மாணவனுக்கு ஞாயிற்றுக்கிழமை (06) காதினால் நீர் வடிந்ததை அவதானித்த பெற்றோர் மாணவனை விசாரித்து, மாணவனை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

மாணவனை பரிசோதனை செய்த வைத்தியர்கள் மாணவரின் செவிப்பறை பாதிப்புக்கு உள்ளாகியமையை உறுதி செய்துள்ளனர்.

அந்தவகையில் வைத்தியசாலை பிரிவு பொலிஸார் இது குறித்து மாணவனிடம் வாக்குமூலம் பெற்று அதனை வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பியுள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here