கர்ப்பமான மாணவி ஒருவர் மொட்டைமாடியிலிருந்து கீழே தவறி விழுந்த நிலையில் விழுந்த அதிர்ச்சியில் வயிற்றிலிருந்து வெளியே வந்த சிசு பாரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், தாய் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் அதிர்ச்சி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது
சென்னையைச் சேர்ந்த இளம்பெண் கிண்டியில் உள்ள ஓர் கல்வி நிறுவனத்தில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ள நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு வீட்டின் மொட்டை மாடியில் நடைப்பயிற்சி செய்துக்கொண்டிருந்த போது மாடியில் இருந்து கீழே தவறி விழுந்துள்ளார்.
மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அவரது பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்த போது கீழே விழுந்ததில் அடிப்பட்ட மாணவி இரத்த வெள்ளத்தில் கிடத்துள்ளார். மாணவியின் அருகே பிறந்த நிலையில் சிசு ஒன்றும் இரத்த வெள்ளத்தில் இருந்துள்ளது.
தங்களுடைய மகளின் வயிற்றில் சிசுவா என அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கோடம்பாக்கத்தில் உள்ள வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து மாணவியை மேலதிக சிகிச்சைகளுக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மாணவிக்கு செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை காதலித்து வந்தநிலையில் இருவரும் நெருங்கிப் பழகி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இதன்காரணமாக மாணவி கர்ப்பம் அடைந்துள்ளமை ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளுக்காக காதலனின் கையடக்க தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்திய போது கையடக்க தொலைபேசி செயலிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
காதலன் ஏமாற்றியதால் மாணவி தற்கொலை செய்ய முயற்சி செய்திருக்கலாம் எனவும், மகள் கர்ப்பமாக இருந்தது பெற்றோருக்கு தெரியுமா என்ற கோணத்திலும்; விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு , சம்பவம் தொடர்பாக வடபழனி பொலிஸார் வழக்குப்பதிவு செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.