பாடசாலை மாணவிகளுக்கு பல சந்தர்ப்பங்களில் ஆபாச காணொளிகளை காண்பித்தார் எனக் கூறப்படும் நபர் நேற்று (20) சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
பாடசாலை செல்லும் 11-14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு சந்தேக நபர் ஆபாச காணொளிகளை காண்பித்துள்ளார் என நானுஓயா பகுதியில் உள்ள மாணவிகள் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
56 வயது சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை (21) இன்று நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு நானுஓயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்த 06 மாணவிகள் தடயவியல் மருத்துவ அறிக்கையைப் பெறுவதற்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் நீதித்துறை மருத்துவ அதிகாரியிடம் பரிசோதனைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸ் நிலையத்தில் பெண்கள் சிறுவர்கள் பிரிவினர் மேற் கொண்டுவருகின்றனர்.




