மாதா சொரூபத்தை வைத்து மத முறண்பாட்டினை ஏற்படுத்த இடமளிக்க கூடாது.

0
162

திருகோணேஸ்வரத்திலே மாதா சொரூபத்தை வைத்து மதங்களுக்கிடையில் மத முறண்பாட்டினை ஏற்படுத்த கூடாது என இலங்கை இந்து குருமார் ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் சிவஸ்ரீ வேலு சுரேஸ்வர சர்மா தெரிவித்தார்.

திருகோணேஸ்வரர் பகுதியில் மாதா சொரூபம் ஒன்று வைக்கப்பட்டதன் காரணமாக அப்பகுதியில் எழுந்துள்ள அமைதியற்ற சூழ்நிலை குறித்து இன்று (14) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்…

கடந்த வருடம் சிவராத்திரி ஆரம்பிக்கும் போதும் இவ்வாறான ஒரு சிலர் சமய முறுகலை ஏற்படுத்துவதற்காக மாதா சொரூபம் ஒன்றினை வைத்து பல்வேறு பிரச்சினைகளை தோற்றுவிக்க முற்பட்டனர் அது பல்வேறு அழுத்தங்களின் காரணமாக நிறுத்தப்பட்டது இந்த வருடமும் சிவராத்திரி பூஜைகள் இடம்பெறவிருக்கும் நிலையில் இவ்வாறு அந்த பிரதேசத்தில் மாதா சொரூபம் ஒன்று வைக்கப்பட்டிருப்பது திட்டமிட்டு மதங்களுக்கிடையே ஒரு சில கிறிஸ்த்தவர்களால் முன்னெடுக்கப்படுகின்ற ஒரு விடயமாகவே எண்ணத்தோன்றுகிறது.

எவருக்கும் தங்களது சமயத்தினை பின்பற்றுவதற்கு உரிமை உள்ளது ஆனால் மற்றுமொரு சமயத்திற்கு பிரச்சினை ஏற்படும் வகையில் அல்லது முறண்பாடுகள் தோற்றுவிக்கும் வகையில் செயற்பட கூடாது ஆகவே இது குறித்து அந்த மாவட்டத்திற்கு பொறுப்பான ஆயர் உடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் இவ்வாறு செயற்பாடுகள் மூலம் இந்து மக்களுக்கும் கிறிஸ்த்தவ மக்களுக்குமிடையில் சமய முறண்பாடுகளை தோற்றுவிக்க முற்பட கூடாது எனவே இவ்வாறு சம்பவங்களை தடுப்பதற்கு கிறிஸ்த்தவ மதத்தலைவர்கள் முன்வரா விட்டால் அது எதிர்காலத்தில் பாரிய பின் விளைவுகளை ஏற்படுத்துவதுடன் இந்த சம்பவம் குறித்து எமது இலங்கை இந்து குருமார் ஒன்றியம் மிக வன்மையாக கண்டிக்கிறது என்றும் அவர் இதன் போது மேலும் தெரிவித்தார்.

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here