மாத்தளையில் விடுதியொன்றியில் தங்கியிருந்த இளைஞர்களிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக நடத்தப்பட்ட கத்திக்குத்துக்குத் தாக்குதலுக்கு இலக்கான இளைஞர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாத்தளையையும் இரத்தினபுரியையும் சேர்ந்த இளைஞர்கள் இருவருக்கிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, இத்மோதல் நேற்று (05) இடம்பெற்றதென, பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
21, 24 வயது குறித்த இளைஞர்கள், தொலைபேசி அழைப்பு மூலம் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டனரென, பொலிஸார் முன்னெடுத்த ஆரம்பகட்ட விவசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த இளைஞர்கள் இருவரும், இவர்களின் வீடுகளில் நண்பர்கள் என்ற பேரில் பல முறை தங்கியிருந்துள்ளதோடு, மாத்தளையில் உள்ள வியாபார நிலையம் ஒன்றிலும் பணியாற்றி வந்துள்ளனர்.
இவர்கள் இருவரில் ஒருவர் சேவையிலிருந்து விலகி வெளிநாட்டுக்குச் செல்லத் தீர்மானித்திருந்த நிலையில், இது குறித்துக் கலந்தாலோசிக்க வருமாறு மற்றைய இளைஞர், விடுத்திக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதன்போதே இருவருக்கிடையில் முரண்பாடு தோன்றியுள்ளதென, பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அதனையடுத்து கத்திக்குத்துக்கு இலக்கான இளைஞரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ள பொலிஸார், அறைக்குள்ளிருந்து ஆடைப் பையொன்றிலிருந்து விசப் போத்தல் ஒன்றையும் மீட்டுள்ளனர்.