மாத்தளையில் விபத்து – மோட்டார் சைக்கிள் சாரதி உடல் சிதைந்து மரணம்!

0
57

மாத்தளையில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தொன்றி  மோட்டார்  சைக்கிள் சாரதியியொருவர் உடல் சிதைந்து மரணித்துள்ளார்.

இன்று சனிக்கிழமை (13) இந்த விபத்து சம்பவித்துள்ளது. இது குறித்த  மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

தனது மகனை பிரத்தியேக வகுப்பு முடிந்து வீட்டிற்கு அழைத்துச் செல்லும் வேளையிலேயே அவர் இந்த துர்பாக்கிச சம்பவத்திற்கு ஆளாகியுள்ளார்.

குறித்த நபர் இன்று காலை, மாத்தளை நவோதயம் கல்வி நிலையத்திற்கு முன்பாக பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருந்த வேலையில் கேஸ்  லொரியொன்றில்  மோதி உயிரிழந்துள்ளார்.

குறித்த ஒரு வழி பாதையில் வேகமாக சென்ற போது வேகத்தை கட்டுப்படுத்த முடியாமலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

மேலும், இந்த விபத்தில் தூக்கி எறியப்பட்டு காலில் கடுமையான காயங்களுடன் மீட்கப்பட்ட  மோட்டார் சைக்கிள் சாரதியின் மகன் மாத்தளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here