மத்துகம, யடதொல, நாவுத்துடுவ பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது சகோதரியின் மகனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் புதன்கிழமை (11) இரவு இடம்பெற்றுள்ளது.
குறித்த பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய ஹெட்டி கங்கானம்கே அயேஷ் சாமிக பெரேரா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சந்தேக நபர் நவுத்துடுவ பிரதேசத்தில் உள்ள விகாரையொறுக்கு முனபாக குடிபோதையில் இருந்த போது தனது சகோதரியின் மகனுடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி அவரை கத்தியால் குத்தியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த இளைஞன் நாகொட போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்துகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.