மறைந்த தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெற்று வருகின்றன.
அவரது புகழுடல் வைக்கப்பட்டுள்ள மாவிட்டப்புரம் இல்லத்தில் இன்று காலை 8.00 மணியளவில் இறுதிக் கிரியைகள் ஆரம்பமாகியுள்ளதுடன், 10.00 மணியளவில் அஞ்சலி உறைகள் இடம்பெறவுள்ளன.
அதனை தொடர்ந்து மாவிட்டப்புரம் இந்து மயானத்தில் மாவை சேனாதிராஜாவின் புகழுடல் தகனம் செய்யப்படவுள்ளது.