மின் கட்டண திருத்தம் குறித்து பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முக்கிய தீர்மானம்!

0
118

2009 மின்சாரச் சட்டத்தின் படி, இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கட்டணத் திருத்தப் பிரேரணையை விரைவுபடுத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது.

அத்துடன், இடைக்கால கட்டண திருத்தம் தொடர்பான அமைச்சரவையின் கோரிக்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் சட்ட ஆலோசனையைப் பெறவும் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இந்த தீர்மானமானது தமது ஆணைக்குழுவின் அனைத்து உறுப்பினர்களினாலும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானம் என கூறியுள்ளார்.

மின் கட்டணத்தை 65 முதல் 70 சதவீதம் வரை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அண்மையில் தீர்மானித்தது. இந்த தீர்மானம் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வருமெனவும் அமைச்சரவை குறிப்பிட்டிருந்தது.

எவ்வாறாயினும், இவ்வாறு மின் கட்டண அதிகரிப்பிற்கான அனுமதியை வழங்க முடியாதென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டப்பட்டது.

எனினும், மின்சார சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மின் கட்டணத் திருத்தம் தொடர்பான கணக்கீடுகளை மேற்கொள்ளவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here