இலங்கை மின்சார சபை மின் கட்டணத்தில் அதிகரிப்புச் செய்ய முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள X தள பதிவில், “இலங்கை மின்சார சபையினால் இரண்டாவது காலாண்டில் மின்சார கட்டணத்தை 13.56% ஆல் அதிகரிக்க முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானமானது, மீண்டும் ஒருமுறை, மின்சாரக் கட்டணத்தை 33% ஆல் குறைப்போம் என்ற அநுர குமார திஸாநாயக்க தேர்தல் மேடைகளில் வழங்கிய தேர்தல் வாக்குறுதியை நேரடியாக மீறுவதாக அமைந்து காணப்படுகின்றது. தொடர்ந்தும் இவ்வாறு பொய்களால் மக்களை ஏமாற்றுவதை நிறுத்திவிட்டு அநுர குமார திஸாநாயக்க இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவது எப்போது ?” என பதிவிட்டுள்ளார்.




