மின்சார வேலியில் சிக்கி 2 பிள்ளைகளின் தாய் பலி

0
210

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை சுரங்கப்பாதைக்கு கீழ் உள்ள சாந்த ஜனபதய எனும் பகுதியில் வீட்டிற்கு பின்புறத்தில் மரக்கறி தோட்டத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி 2 பிள்ளைகளின் தாய்யொருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (09.12.2021) மதியம் இடம்பெற்ற இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் ஏ.எம்.சந்திரலதா வயது 48 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த வீட்டார்கள் தங்களது மரக்கறி தோட்டத்தை மிருகங்களிடமிருந்து பாதுகாப்பதற்காக மின்சார வேலியை சட்டவிரோதமாக பொருத்தியுள்ளனர்.

குறித்த பெண் ஒவ்வொரு நாளும் தோட்டத்திற்கு செல்லும் போது மின்சாரத்தை துண்டித்துவிட்டு செல்வதாகவும் இன்றைய தினம் அதனை துண்டிக்காது மறந்து சென்றதனால் குறித்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பிரதேச வாசிகள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவரின் சடலம் நீதவானின் மேற்பார்வையின் பின் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here