மின்சாரக் கட்டணத் திருத்தம் ஜூலை 15இல் அறிவிக்கப்படும்!

0
167

இந்த வருடத்தில் 2ஆவதுதடவையாகமேற்கொள்வதற்குஉத்தேசிக்கப்பட்டுள்ள மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பொதுமக்களிடம் ஆலோசனைகளை கோரியுள்ளது.

இலங்கை மின்சார சபையின் மின்சாரக் கட்டண திருத்த முன்மொழிவு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.இந்த முன்மொழிவு தொடர்பான பொதுமக்களின் எழுத்துபூர்வ கருத்து மற்றும் ஆலோசனைகள் எதிர்வரும் ஜூலை 8 ஆம் திகதி வரையும், வாய்மூல கருத்து எதிர்வரும் ஜூலை 9ஆம் திகதியும் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.

பொதுமக்களின் ஆலோசனைகள் பெறப்பட்டதன் பின்னர் மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான இறுதி முடிவு, ஜூலை மாதம் 15ஆம் திகதியன்று அறிவிக்கப்படும் என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here