மீட்கப்பட்ட கைக்குண்டை அமைச்சர் ஒருவரின் இலலத்தில் இருந்து கொண்டுவந்ததாக வாக்குமூலம்.

0
172

நாரஹேன்பிட்டி லங்கா வைத்தியசாலையில் உள்ள கழிவறையில் இருந்து மீட்கப்பட்ட கைக்குண்டை, கொழும்பு – 07 விஜேராம மாவத்தையில் உள்ள அமைச்சர் ஒருவரின் உத்தியோகபூர்வ இலலத்தில் இருந்து தாம் கொண்டுவந்ததாக, கைதுசெய்யப்பட்டவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

எவ்வாறிருப்பினும், சந்தேகநபரின் வாக்குமூலம் இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை என, சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் கொழும்பு குற்றவியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நாரஹேன்பிட்டி லங்கா வைத்தியசாலையின் முதலாம் மாடியில் உள்ள கழிவறையில் இருந்து அண்மையில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டமை தொடர்பில், திருகோணமலை – உப்புவெளி பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

லங்கா வைத்தியசாலையின் கழிப்பறையிலிருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றவியல் பிரிவினர் முன்னெடுத்த விசாரணைகளையடுத்து, குருணாகல், மஹவ பகுதியில் வைத்து இச்சந்தேகநபர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here