பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட வறுமைக் கோட்டின் கீழுள்ள 33 லட்சம் குடும்பங்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கான நிதியை உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கவுள்ளதாக அதன் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன தெரிவித்துள்ளார்.