மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ள அரச அதிசொகுசு பேருந்துகள்

0
163

சேவையில் இருந்து நீக்கப்பட்ட சொகுசு ரக பேருந்துகள் எதிர்வரும் 6 மாதங்களில் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

இந்த பேருந்துகள் தொழிநுட்ப கோளாறுகள் மற்றும் உதிரிபாகங்களின் பற்றாக்குறை காரணமாக கடுபெத்த அதிசொகுசு ரக சுற்றுலா போக்குவரத்து சேவை நிறுவனத்தில் தரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கையில் இடம்பெற்ற பொதுநலவாய மாநாட்டின் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொள்வதற்காக அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட 50 சொகுசு ரக பேருந்துகளே இவ்வாறு சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, பேருந்துகளால் நாளாந்தம் ஒரு இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான இலாபத்தை ஈட்ட முடியும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.இந்நிலையில், குறித்த பேருந்துகளை விரைவாக திருத்தி மீண்டும் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here