மீன்பிடி படகுகள் விபத்து; பலர் மாயம்

0
13

வெவ்வேறு பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இரண்டு மீன்பிடி படகுகள் விபத்தில் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தேவுந்தர மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சென்ற படகும், களுத்துறை பகுதியில் இருந்து சென்ற ஒரு மீன்பிடி படகும் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுளளது.

தேவுந்தர மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று (27) மாலை புறப்பட்ட படகில் 5 மீனவர்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது.இந்த படகு ஒரு வணிகக் கப்பலில் மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

விபத்தில் இருந்து மீனவர் ஒருவர் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார், ஏனைய நான்கு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து கடற்படைக்கு தகவல் அளிக்கப்பட நிலையில் கடற்படை தேடுதல் நடவடிக்கைக்காக கப்பலை அனுப்பியுள்ளது.இதேவேளை மேலும் பல மீன்பிடி படகுகள் காணாமல் போன நான்கு மீனவர்களைத் தேடத் தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த விபத்து கரையிலிருந்து சுமார் 20 மைல் தொலைவில் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், களுத்துறை பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்குச் சென்ற ஒரு மீன்பிடி படகில் இருந்த இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காணாமல் போனவர்கள் நதுன் குமார மற்றும் அவரது சகோதரர் துமிந்த நதுன் குமார என்றும், அவர்கள் அளுத்கம பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

காணாமல் போனவர்களை அப்பகுதி மக்கள் படகுகள் மூலம் தேடி வருகின்றனர், மேலும் விபத்துக்குள்ளான படகு கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here