முக்கிய சந்தேக நபர் வெலிக்கடை சிறையில் உயிரிழப்பு!

0
109

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியின் தாயார், வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தபோது உயிரிழந்துள்ளார்.

இந்த மாதம் 11 ஆம் திகதி மாரடைப்பு காரணமாக அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஷாரா செவ்வந்தியின் தாயார் மற்றும் சகோதரர் இருவரும் கொலைக்கு உதவியதாக முன்னதாக கைது செய்யப்பட்டனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மேலும் சட்ட நடவடிக்கைகள் நிலுவையில் உள்ளதால், தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் அவர் உயிரிழந்துள்ளார் .

இதற்கிடையில், கொலை தொடர்பாக தலைமறைவாக இருக்கும் இஷாரா செவ்வந்தியை பொலிஸார் தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here