இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த போது பெரிதும் முக்கியத்துவமளித்து இளைஞர் யுவதிகளுக்கு கைகொடுக்கும் வகையில் நகரங்கள் மற்றும் முளை முடுக்கெங்கும் வரையப்பட்ட சுவர் ஓவியங்கள் இன்று பாழாகி போகும் நிலையினை அடைந்து வருகின்றனர்.
சுற்றுப்புற சூழலினை அழகுப்படுத்து நோக்கிலும் இளைஞர் யுவதிகளின் திறமைகளுக்கு கைகொடுக்கு வகையிலும் கடந்த காலங்களில் இந்த சுவரோவியங்கள் வரையப்பட்டன.
இதற்கு ஊடகங்களில் பாரிய அளவில் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன் மூலப்பொருட்களுக்காகவும் வரைவதற்காகவும் பாரிய நிதி செலவிடப்பட்டன. அத்தோடு மனித உழைப்பு பயன்படுத்தப்பட்டன.
ஒரு சில இடங்களில் இந்த சித்திரங்களை வரைவதற்காக மதில் அருகில் காணப்பட்ட மரங்களும் வெட்டி அகற்றப்பட்டன. இவ்வாறு பல்வேறு சவால்களுக்கு மத்தியில் வரையப்பட்ட இந்த சித்திரங்கள் எவ்வித பராமறிப்புமின்றி அழிந்து போகும் நிலையினை அடைந்து வருகின்றன.
சுற்றுப்புற சூழலுக்கு அழகு சேர்க்கும் இந்த சித்திரங்கள் உட்பட நல்லத்திட்டங்கள் யார் கொண்டு வந்தாலும் அதனை போற்றி பாதுகாப்பதற்கு கொள்கை ரீதியான அமைப்பு ஒன்று அவசியம் என்பதனை தற்போது அழிந்து போகும் சித்திரங்கள் எடுத்துக்காட்டுகின்றன. என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவே குறித்த ஓவியங்கள் காணப்படும் பிரதேசங்களில் உள்ள அரச நிறுவனங்கள் இந்த சித்திரங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கே.சுந்தரலிங்கம்