முடிவுக்கு வருகிறது மனிதர்கள் மீதான கொரோனா! – ரஷ்ய விஞ்ஞானி கணிப்பு!

0
181

உலகம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா பாதிப்பு விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக ரஷ்ய விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டு காலமாக கொரோனா வைரஸின் தாக்கம் இருந்து வரும் நிலையில் கொரோனாவின் பல்வேறு திரிபுகளால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் புதிய வீரியமிக்க திரிபான ஒமிக்ரான் மேலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கொரொனா பரவல் குறித்து பேசியுள்ள ரஷ்ய தொற்றுநோயியல் நிபுணர் விலாடிஸ்லோம் ஸெம்சுகோவ் “மனிதர்கள் மீதான கொரோனா வைரஸின் தாக்கம் முடிவை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த வைரஸ் இயற்கையில் தன்னை கொல்லாத வேறு உயிரினத்தை தேடி அதில் அடைக்கலம் புகும். மனித இனத்தில் ஒட்டுமொத்தமாக 70 முதல் 80 சதவீதத்தினர் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்போது கொரோனாவால் நீண்ட காலம் தாக்குபிடிக்க முடியாது. எனவே தடுப்பூசி செலுத்துவதில் அனைத்து நாடுகளும் கவனம் செலுத்த வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here