முட்டைகளை தட்டுப்பாடின்றி சந்தைக்கு வழங்குவதற்கு முட்டை உற்பத்தியாளர்கள் செயற்பட்டு வருவதாக இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
இன்று (07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தற்போது சில்லரை விலையில் முட்டை ஒன்றின் விலை 35-36 ரூபாய் வரை உள்ளது.
நாட்டின் தேவை மற்றும் விநியோகத்திற்கு ஏற்ப முட்டையின் விலை நிர்ணயம் செய்யப்படுவதால், வரும் பண்டிகை காலத்தில் முட்டையின் தேவை அதிகரிக்கலாம். இதன்படி, சில்லறை விலையில் முட்டை ஒன்றின் விலை 45 ரூபாவிற்கும் குறைவாகவே பேணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கோழி இறைச்சியை தட்டுப்பாடு இன்றி சந்தைக்கு வழங்குவதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பண்டிகைக் காலங்களில் கோழி இறைச்சியின் விலையை 1000 ரூபாவிற்கும் குறைவாகவே பேண முடியும் என இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.