முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை மீண்டும் நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்குமாறு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
புத்தாண்டு காலத்தை இலக்காகக் கொண்டு சில முட்டை உற்பத்தியாளர்கள் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படுத்த முயற்சிப்பதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
நிலைமையை சமாளிக்கும் வகையில், உள்ளூர் சந்தையில் முட்டை கிடைப்பதை அதிகரிக்கும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.
முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயம் செய்யுமாறும், முட்டையை விற்க வேண்டிய அதிகபட்ச சில்லறை விலையை முன்வைக்குமாறும் அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவுறுத்தியுள்ளார்.