முதல் நாடாக புத்தாண்டை வரவேற்றது நியூசிலாந்து.

0
208

2022 புத்தாண்டை பட்டாசு வெடித்து வரவேற்ற உலகின் முதல் நாடு என்ற பெருமையை நியூசிலாந்தின் ஒக்லாந்து பெற்றுள்ளது.

பல வண்ண பட்டாசுகளின் உதவியுடன், மில்லியன் கணக்கான நியூஸிலாந்து மக்கள் 2022 புத்தாண்டை வரவேற்றனர்.

கடிகரம் நள்ளிரவு 12.00 மணியை தொட்டவுடன் ஒக்லாந்தின் அடையாளச் சின்னங்களான ஸ்கை கோபும், ஹார்பர் பாலம் என்பன வண்ணமயமான மின் குமிழ்களால் ஜொலித்தன.

கொவிட்-19 இன் புதிய ஒமிக்ரோன் மாறுபாட்டின் தொற்றுகள் உலகம் முழுவதும் அதிகரித்து வருவதால், பல்வேறு கட்டுப்பாடுகள் பல நாடுகளில் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இருப்பினும் நியூசிலாந்து இந்த முறை பொதுக் கூட்டங்கள் குறித்த கட்டுப்பாடுகளை சற்று தளர்த்தியுள்ளது.

எனினும் நியூஸிலாந்தில் பல இடங்களில் கொவிட்-19 நோய்த்தொற்றுகளின் அதிகரிப்பு காரணமாக, புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான திட்டங்கள் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாகவும் முடக்கப்பட்டன அல்லது இரத்து செய்யப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here