முதல் நாள் வெளிநாட்டு வசூலில் ‘லியோ’வை முந்தி ‘கூலி’ முதலிடம்!

0
19

ரஜினி நடித்த ‘கூலி’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வியாழக்கிழமை வெளியானது. இதனை ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் பார்த்து தங்களுடைய கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள். இதனால் சமூக வலைதள பக்கங்களில் #Coolie ஹேஷ்டேக் தொடர்ந்து ட்ரெண்ட்டாகி வருகிறது.

தற்போது வெளிநாட்டு வசூல் நிலவரம் வெளியாகி இருக்கிறது. இதுவரை, முதல் நாள் 8.15 மில்லியன் டாலர்கள் வசூலித்து ‘லியோ’ முதல் இடத்தில் இருந்தது. அதற்கு முன்னதாக ‘கபாலி’ முதல் இடத்தில் இருந்தது. தற்போதைய நிலவரப்படி ‘கூலி’ படத்தின் வசூல் ‘லியோ’வை முந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் நாள் அதிகாரபூர்வ வசூல் நிலவரம் என்ன என்பது நாளை தெரியவரும்.

‘கபாலி’ வசூலை யாருமே முறியடிக்க முடியாது என்ற சூழலில், ‘லியோ’ அதனை முறியடித்தது. இதற்கு 7 ஆண்டுகள் ஆனது. ஆனால், ‘லியோ’ வசூலை ‘கூலி’ படம் முறியடித்துள்ளது. இதற்கு 2 ஆண்டுகள் மட்டுமே ஆகியிருக்கிறது. இதனை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அதே வேளையில், காலை முதலே ‘கூலி’ படத்தை பலருமே எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்ற கருத்தும் பகிரப்பட்டு வருகிறது. இதனால், வரும் நாட்களில் ‘கூலி’ படத்தின் வசூல் பெருமளவில் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here