முன்பள்ளி ஆசிரியைகளால் தங்களையும் உயர்த்தி சமூகத்தையும் உயர்ந்த நிலைக்கு கொண்டுவரலாம் – கலாநிதி கலா சந்திரமோகன்!!

0
162

முன்பள்ளி ஆசிரியைகளால் தங்களையும் உயர்த்தி சமூகத்தையும் உயர்ந்த நிலைக்கு கொண்டுவர முடியும்.ஒரு காலத்தில் சமூகத்தில் எந்த வித அங்கீகாரமும் இன்றி இருந்த மலையக பெருந்தோட்ட பகுதி முன்பள்ளி ஆசிரியர்கள் பிரிடோ நிறுவனத்தின்

முயற்சியாலும்  அவர்களுடைய சமூக உணர்வுடனான சேவையாலும் இன்று ஒரு மதிப்புக்குறிய நிலைக்கு உயர்ந்திருப்பது பெரிதும்மகிழ்ச்சிக்குறிய விடயமாகும். கடந்த 25 வருடங்களாக பெருந்தோட்டங்களில் முன்பள்ளிக் கல்வியை அறிமுகப்படுத்தவும்  முன்பள்ளிகளை உருவாக்கிதக்கவைத்து அவற்றை நீடித்து நிலைக்க செய்யும் பிரிடோ நிறுவனம் பல அர்பணிப்புக்களை செய்ய வேண்டியிருந்தது என்பதை அறியும் போது ஒரு புறம் கவலையாகவும் மறுபுறம் அந்த அர்ப்பணிபபுகளுக்கு தகுந்த பலன் கிடைத்திருக்கிறது என்பதை இன்றைய நாளில் பார்க்கும் போது மிகுந்த
மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

IMG-20180301-WA0028

பிரிடோ நிறுவனத்தின் கீழ் இயங்கும் தோட்ட கிராமிய முன்பள்ளி ஆசிரியைகள் கல்வி நிறுவனத்தினால் நடத்தப்பட்ட ஆரம்ப சிறுவர் பராய கல்வி அபிவிருத்தி அதாவது முன்பள்ளி ஆசிரியைகளுக்காக பயிற்சியை ப10ர்த்தி செய்த 62 ஆசிரியைகளுக்கான பட்டமளிப்பு நிகழ்வு அட்டன் சாராதா மண்டபத்தில் பிரிடோ நிறுவனத்தின் திட்ட இயக்குனர் திரு. சந்திரசேகரனின் ஏற்பாட்டிலும் விசேட அதிதியாக திறந்த பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் திரு. எஸ் இராமதாஸ் அவர்களின் வழிகாட்டலிலும் நடைபெற்ற போது அந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையை நிகழ்த்திய இலங்கை திறந்த பல்கலைக்கத்தின் மொழிகள் கற்கைத்துறை மானுட விஞ்ஞானங்கள் பீடத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி கலா சந்திமோகன் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் பேசுகையில் முன்பள்ளி ஆசிரியைகள் என்ற வகையில் மலையக பெருந்தோட்ட பகுதிகளில் இருந்து வந்த பெண்களாகிய நீங்கள் உங்கள் கல்வியை மேம்படுதத திறந்த பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்பட்ட கற்கைநெறியை கற்கும் சந்தர்ப்பத்தையும் பிரிடோ நிர்வனத்தின் கீழ் இயங்கும் தோட்ட கிராமிய முன்பள்ளி ஆசிரியைகள் கல்வி நிறுவனத்தினால் வழங்கப்படும் பயிற்சிகளையும் பயன்படுத்தி இன்று பட்டம் பெறும் நிலைக்கு
வந்திருக்கிறீர்கள்.

ஏற்கனவே சான்றிதழ் தரத்தில் பயிற்சி பெற்ற சிலர் உயர் டிப்லோமா தரத்தில் சித்தி பெற்று முழுமையான பட்டத்தை
பெறும் நிலைக்கு விரைவில் வரவிருக்கிறீர்கள் என்பது ஒரு பெருமைக்குரிய விடயம். இது மட்டுமல்ல உங்களை கல்வியில் உயர்த்திக் கொள்ள இன்னும் பல சந்தர்பங்கள் இருப்பதால் அவற்றையும் தேடிக் கண்டுபிடித்து அவற்றை பயன்படுத்துவதன் மூலம நீங்கள் உங்களை உயர்த்திக் கொண்டு சமூகத்தையும் உயர்த்த வேண்டும..

பெண்களாகிய உங்களுக்கு ஆண்களை போலன்றி குடும்ப பொறுப்புரூபவ் பிள்ளைகளை ரூபவ் வளர்த்தல்ரூபவ் பெற்றர்களை கவனித்துக் கொள்ளுதல் என்று பல பொறுப்புகளும் சவால்களும் இருந்தாலும் அவற்றையும் கவனித்துக்கொண்டு கல்வியில் உயர்வதற்காக முய்ற்சியையும் நீங்கள் விட்டுக்கொடுக்காமல் முன்னெடுக்க வேண்டும்.

உங்களை போல் மலையக பின்தங்கிய சமூகத்தில் இருந்து வந்த நான் இன்று உங்கள் முன் நின்று பேசுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தியது நான் பெற்ற கல்வியேயாகும். இதே வேளையில் இங்கு இந்த பட்டமளிப்பு விழாவிற்கு உங்கள் குடும்ப அங்கத்த்வர்கள் விசேடமாக உங்கள் கனவர்கள் வந்திருப்பது ஒரு விசேட அம்சமாகும். குடும்ப பெண்களாகிய உங்கள் முன்னேற்த்திற்கு உங்கள் குடும்ப ஆண்கள் விசேடமாக கனவர்களின் ஒத்துழைப்பு மிகவும அவசியம். இங்கு வந்துள்ள கனவர்கள் அந்த ஒத்துழைப்பை வழங்குவது வரவேற்கத்த்க்கது. எல்லா கணவர்களும் இந்த முன்மாதிரியையை பின்பற்ற வேண்டும்”.
இந்த ஆண்டிலும் தோட்ட கிராமிய முன்பள்ளி ஆசிரியைகள் கல்வி நிறுவனம் அட்டன் கொட்டகலை புஸ்ஸல்லாவைகாவத்தை  இரத்தினபுரி அகியபகுதிகளில் மார்ச் மாத கடைசியில் புதிய ஆண்டிற்கான முன்பள்ளி ஆசிரியை பயிற்சி நெறியை ஆரம்பிக்க உள்ளது.

பயிற்சியில் இணைந்து கொள்ள விரும்புபவர்கள் 0772277428 அல்லது 0772277425 ஆகிய இலக்கங்களோடு தொடர்பு கொண்டு விபரங்களை பெற்றுக்கொள்ளலாம்.

அக்கரப்பத்தனை நிருபர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here