முன்பள்ளி மாணவர்களுக்கு கௌரவிப்பு.

0
134

தலவாக்கலை வட்டகொட‌ பிரதேசத்தில் பிரிடோ நிறுவனத்தின் கீழ் இயங்கும் 16 முன்பள்ளிகளில் கல்வி கற்று இவ்வருடம் அரச பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா பிராந்திய இணைப்பாளர் திருமதி சந்தோசம் தலைமையில் நு.பாமஸ்டன் தமிழ் மகா வித்தியாலய மண்டபத்தில் 28 அன்று மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக பிரிடோ நிறுவன உதவி நிறைவேற்றுப் பணிப்பாளர் எஸ்.கே சந்திரசேகரன் காரியாலய உத்தியோகஸ்தர் அன்புமலர் இணைப்பாளர் எஸ் சிவகுமார் ஊடகவியலாளரும் நிறுவனத்தின் இணைப்பாளருமான கே.புஸ்பராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது சிறுவர்கள் கலை நிகழ்ச்சிகளில் பங்குபற்றியதையும் ஆசிரியர்கள் பெற்றோர்களால் கௌரவபடுத்துவதையும். மாணவர்களுக்கு அதிதிகள் சான்றிதழ் வழங்கி பதக்கம் அணிவிப்பதையும் படங்களில் காணலாம்.

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here