கொட்டிகாவத்தை – முல்லேரியாவ பிரதேச சபையின் தலைவர் ரங்கஜீவ ஜயசிங்க, கொவிட் -19 தொற்றால் பாதிப்புக்குள்ளாகி நேற்யை தினம் உயிரிழந்துள்ளார். உயிரிழக்கும்போது அவருக்கு வயது 45.
முன்னதாகவே உடல் நலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கொரோனா தொற்றுக்குள்ளாகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.