யாழ்.சித்தங்கேணியைச் சேர்ந்த 52 நாட்களேயான கஜா சாயன் என்ற பெண் சிசு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இதேவேளை, நள்ளிரவு பால்குடித்துவிட்டு நித்திரையில் ஆழ்ந்திருந்த சிசுவுக்கு அதிகாலை 3.30 மணியளவில் மூக்கில் இருந்து இரத்தம் வந்துள்ளது.
மேலும், மூச்சுபேச்சு இன்மையால் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது, ஏற்கனவே சிசு இறந்து விட்டதாக கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, மரண விசாரணையை யாழ்.வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டதுடன், பால் புரைக்கேறியே சிசு இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.