மூன்று ரயில் சேவைகள் இன்று காலை இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயிவே திணைக்களம் அறிவித்துள்ளது. மூன்று ரயில் சேவைகள் இன்று காலை இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயிவே திணைக்களம் அறிவித்துள்ளது.
ரயில் இயந்திர உதவி சாரதிகளுக்கு நிலவும் பற்றாக்குறையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், இதன் காரணமாக நேற்று (25) மாலையும் நான்கு ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
ரயில் சாரதிகள் சங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட தொழில் சங்க நடவடிக்கை காரணமாக ரயில் போக்குவரத்து சேவைகள் கடந்த 24ஆம் திகதி தடை ஏற்பட்டிருந்தது.
மேலும், ரயில் சாரதிகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் பிரச்சினையினை முன்னிறுத்தி ரயில் சாரதிகளால் இவ்வாறு தொழில் சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.