மெய்வல்லுனர் போட்டியில் தங்கம் வென்ற மலையக வீரர்கள்!

0
9

சிங்கப்பூரில் Singapore Masters Track and field association ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற சர்வதேச திறந்த மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் இலங்கை சார்பாகவும் மலையகம் சார்பாக மீண்டும் ஒரு வெற்றி வாகை சூடி இலங்கைக்கும் மலையக மண்ணிற்கும் பெருமையை சேர்த்துள்ளார் துரைசாமி விஜிந்த்.

12/7/2025 நடைபெற்ற சுற்றி எரிதல் போட்டியில் முதலாம் இடம் பெற்று தங்க பதக்கத்தையும், 13/7/2025 நடைபெற்ற பரிதி வட்டம் வீசுதல் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளி பதக்கத்தையும், 5000M வேகநடை போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளி பதக்கத்தையும் பெற்று மொத்தம் ஒரு தங்கம், இரண்டு வெள்ளி பதக்கம் அடங்கலாக மொத்தம் மூன்று பதங்களை பெற்றார்.

இதேவேளை மணிவேல் சத்தியசீலன் 12/7/2025 நடைபெற்ற 1500M போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளி பதக்கத்தையும், 13/7/2025 நடைபெற்ற 5000M வேகநடை போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்று தங்க பதக்கத்தையும் மொத்தமாக இரண்டு பதங்களை பெற்றார். இப்போட்டியில் சுமார் 12 நாடுகள் கலந்து கொண்டமை முக்கிய அம்சமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here