நுவரெலியா கல்வி வலய ஹோல்புறூக் கோட்டத்திலுள்ள மெராயா தமிழ் மகா வித்தியாலயத்தின் பாடசாலை அபிவிருத்திச் சங்க வருடாந்த பொதுக்கூட்டம் அதிபர் நல்லதம்பி முத்துக்குமார் தலைமையில் 08.திகதி அன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
இக்கூட்டத்தில் விசேடமாக வலயக் கல்விப்பணி மனையின் பிரதிநிதியாக ஆசிரிய ஆலோசகர் எஸ். யோகேஸ்வரன் ; கலந்துகொண்டு;.; பெற்றோர்கள் மத்தியில் உரையாற்றியபோது கடந்த க.பொ.த. சாதாரண பரீட்சையில் 09 ஏ சித்திகளை பெற்று கோட்டத்தில் முதன்மை பெற்றமைக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவிக்கும் அதேவேளை அண்மைகாலமாக பாடசாலையின் வளர்ச்சியை பார்க்கின்ற போது பாரிய மாற்றங்கள் ஏற்ப்பட்டுள்ளது.
இப்பாடசாலையில் பணிபுரிகின்ற ஆசிரியர்கள் மற்றும் அதிபர் உள்ளிட்ட குழாம் உணர்வுடன் சேவைசெய்வதன் ஊடாகவே இந்ந மாற்றம் ஏற்பட்டுள்ளது .என இவர் தெரிவித்தார்
இவர் மேலும் தெரிவிக்கையில் பாடசாலையின் அபிவிருத்தி பணிகளுக்கு பெற்றோர்கள் அதிக பங்களிப்பு வழங்கவேண்டும்.
ஆசிரியர்களும் மாணவர்களுக்கு கற்றல் கற்பித்தல் பணிகளுக்கு ஒத்தாசைபுரிவதன் மூலம் பல மாணவர்களை உருவாக்கமுடீயும்.
இப்பாடசாலையில் போதிய வளங்கள் இல்லை இருப்பினும் ஆசிரியர்கள் தங்களுக்கு முடிந்த அளவு சேவை செய்வது பாராட்டவேண்டிய விடயமாகும்.
இப்பாடசாலைக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக இவர்தெரிவித்தார்
தொடர்ந்து நடப்பு வருடத்துக்கான பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களின் தெரிவு இடம்பெற்றுள்ளது.
இதன்போது சங்கத்தின் பதவிவழி தலைவராக அதிபர் திரு.நல்லதம்பி முத்துக்குமார் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் சங்கத்தின் புதிய செயலாளராக இராஜகோபால் மதனகாந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மேலும் சங்கத்தின் நடப்பு வருட அங்கத்துவ பெற்றோர் உறுப்பினர்களாக திரு.எஸ். சுப்பிரமணியம். திரு. கார்த்திகேயன். திரு.சந்திரமோகன் திருமதி.ஏ.கவிதா .உதயசந்திரன் திருமதி எஸ்.அமரஜோதி எஸ்.நடராஜா அமிர்தநாதன் கிலபர்ட் .நரேந்திரன் மற்றும் பி.இராமகிருஸ்ணண் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்னர்.
தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய அங்கத்தவர்கள் அனைவைரயும் மேடையில் வைத்து அதிபர் பாராட்டி வாழ்த்துரைத்துள்ளதுடன் உதவி அதிபர் ஆசிரியர்கள் மற்றும் சங்கத்தின் முன்னால் உறுப்பினர்களும்; வாழ்த்துக்களை வழங்கியுள்ளனர். அதனை தொடர்ந்து பாடசாலையின் நடப்புவருடத்துக்கான அபிவிருத்தி மற்றும் கற்றல் கற்பித்தல் சார்ந்த செயற்பாடுகள் தொடர்பாக புதிய தீமானங்களும் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஆக்கரப்பத்தனை நிருபர்.