மெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – இலங்கை அமைச்சர் இராதாகிருஷ்ணன்!!

0
157

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் தி.மு.கவின் தலைவர் கருணாநிதி அவரின் உடலை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணாவின் நினைவிடத்திற்கு அருகாமையில் நல்லடக்கம் செய்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.இன்று கருணாநிதி அவரின் இறப்பு என்பது தமிழ்நாட்டுக்கு மட்டுமன்றி ஏனைய நாடுகளில் வாழும் தமிழ் மக்களுக்கு பாரிய பேரிழப்பாகும். கலைஞர் என்ற அடிப்படையில் ஒரு கலைஞனை இலக்கும் போது அந்த நாட்டின் உடைய கலைதுறைகள் மற்றும் ஏனைய துறைகளை பற்றி சிந்திக்க வேண்டிய தருணமாக கருணாநிதியின் இறப்பு உள்ளது என இவர் மேலும் தெரிவித்தார்.

இன்று (08.08.2018) கருணாநிதி அவர்களின் இறுதி கிரியைகளில் கலந்து கொள்ள தமிழ்நாட்டுக்கு செல்லும் போது இதனை இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்திருந்து தனது பயணத்தை தொடரும் போது தொலைபேசி ஊடாக தெரிவித்தார்.

மேலும் இறுதி கிரியைகளில் கலந்து கொள்ள இவருடன் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.திலகராஜ் மற்றும் வடிவேல் சுரோஷ் ஆகியோரும் தமிழ்நாட்டுக்கு சென்றனர்.

அத்தோடு இறுதி கிரியைகளில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவு 07.08.2018 அன்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக அதன் தலைவர் மற்றும் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் மற்றும் ஊவா, மத்திய மாகாண அமைச்சர்களான செந்தில் தொண்டமான், எம்.ரமேஷ்வரன் ஆகியோர் சென்றிருந்தமை குறிப்பிடதக்கது.
(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here