மேசன் மவுண்ட் அடுத்த இரண்டு ப்ரிமியர் லீக் போட்டிகளில் விளையாடமாட்டார் – மென்செஸ்டர் நிர்வாகம்

0
220

இங்கிலாந்து கால்பந்தாட்ட அணி வீரரான மேசன் மவுண்ட் எதிர்வரும் 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள UEFA Euro qualifying கால்பந்தாட்ட தொடரில் விளையாடுவது நிச்சயமில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
மென்செஸ்டர் யுனைடெட் அணியின் மிட்பீல்டர் (Midfielder) மேசன் மவுண்ட் உபாதை காரணமாக அடுத்து நடைபெறவிருக்கு இரண்டு ப்ரிமியர் லீக் போட்டிகளில் விளையாடமாட்டார் என மென்செஸ்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது.கடந்த 19ம் திகதி நடைபெற்ற ப்ரிமியர் லீக் தொடரின் இரண்டாவது சுற்றின் ஆறாவது போட்டியில் டோட்டன்ஹாம் ( Tottenham) அணி 2-0 என்ற கோல் கணக்கில் மென்செஸ்டர் யுனைடெட் அணியை வீழ்த்தியது.

இந்த போட்டியில் மேசன் மவுண்ட் 83 வது நிமிடத்தில் களத்தில் இருந்து வெளியேறினார்.அவருக்கு பதிலாக மென்செஸ்டர் யுனைடெட் அணியில் Facundo Pellistri இணைந்துகொண்டார்.

அதற்கு முன்னர் கடந்த 15ம் திகதி நடைபெற்ற முதலாவது சுற்றின் இறுதி போட்டியில் வுல்வ்ஸ் அணியை மென்செஸ்டர் யுனைடெட் 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.இந்த போட்டியின் முதல் பாதியில் விளையாடுவதற்கு மிகவும் சிரமப்பட்ட மேசன் மவுண்ட் இரண்டாவது பாதியின் 68வது நிமிடத்தில் களத்தில் இருந்து வெளியேறினார்.

இவருக்கு பதிலாக அணியில் கிறிஸ்டியன் எரிக்சன் (Christian Eriksen) இணைத்துக்கொள்ளப்பட்டார்.மேசன் மவுண்ட் கடந்த ஜூன் மதம் செல்சியா அணியில் இருந்து 55 மில்லின் யூரோ பெறுமதியான ஒப்பந்தத்தின் அடிப்படையில் மென்செஸ்டர் யுனைடெட் அணியில் இணைந்தார்.

இங்கிலாந்து கால்பந்தாட்ட அணி வீரரான மேசன் மவுண்ட் எதிர்வரும் 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள UEFA Euro qualifying கால்பந்தாட்ட தொடரில் விளையாடுவது நிச்சயமில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here