மேல்கொத்மலை நீர் தேக்கத்தில் இனந்தெரியாத பெண் ஒருவரின் சடலம் மீட்பு!!

0
272

தலவாகலை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட மேல்கொத்மலை நீர்தேக்கத்தில் இனந்தெரியதாக பெண் ஒருவரின் சடலம் ஒன்று தலவாகலை மேல்கொத்மலை நீர்தேக்கத்தில் இருந்து 04.01.2018.வெள்ளிகிழமை காலை மீட்கபட்டுள்ளதாக தலவாகலை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சடலம் மேல்கொத்மலையின் மத்திய பகுதியில் மிதந்து கொண்டிருந்ததாகவும் அதனை இனங்கண்ட பிரதேச வாசிகள் தலவாகலை பொலிஸாருக்கு தகவல் வழங்கியமை அடுத்து குறித்த சடலம் மீடகபட்டுள்ளதாகவும் சடலமாக

மீட்கபட்ட பெண்ணின் சடலம் அடையாளம் காணபடவில்லை என தலவாகலை பொலிஸாரின்
ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் தடைவியல் பொலிஸார் வரவழைக்கபட்டு விசாரனைகளை ஆரம்பித்துள்ளதோடு மரண விசாரனைக்காக நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதவான் தலைமையில் மரண விசாரனைகள இடம் பெற்றவுடன் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரீசோதனைக்காக சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கபட உள்ளதாக தலவாகலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
DSC00906 09

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை தலவாகலை பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றமை குறிப்பிடதக்கது

எஸ். சதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here