மைத்திரியின் அலையில் பாராளுமன்றம் சென்றால் பத்தாது இந்த மக்களுக்கு சேவைசெய்து அதன் மூலமாக மக்களின் அங்கீகராத்தினை பெறமுடியுமானால் அது தான் தில்லு இருந்தா மோதிபாரு என்கிறார் கணபதி கனகராஜ்.கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரியின் அலையில் பாராளுமன்ற சென்றால் பத்தாது இந்த மக்களுக்கு சேவையினை செய்து அதன் மூலமாக மக்களின் அங்கிகாரத்தை பெறமுடியுமானால் அது தான் தில்லு இருந்தா மோதிபாரு எனவும் தில்லு இருந்தா மோதிபாரு என்பது சட்டையை பிடித்து சண்டை போட்டு கொள்வது அல்ல அரசியல் ரீதியாக எங்களோடு மோதி ஜெயிக்க முடியாது என்பதற்கு அடையாளம் தான் என்கிறார் இலங்கை தொழிலாளர் காங்ரசின் உபதலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான கணபதி கனகராஜ்.
மஸ்கெலியா பகுதியில் 13.05.2018.ஞாயிற்றுகழமை இடம் பெற்ற நிகழ் ஒன்றின் போது கலந்த கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மைத்திரியின் அலையில் அலையாக அல்லிபோனவர்கள் நினைத்து கொள்கிறார்கள்.
இந்த சமூகத்தின் நிலையான தலைவர்கள் என்று இவர்கள் எத்தனை கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருப்பார்கள் எத்தனை பேர் தொழிலாளர்களோடு நின்றிருப்பார்கள் இரவு பகலாக தொழிலாளர்களுக்கு உழைத்திருப்பார்கள் என்று பார்த்தால் அதில் வட்டம் மாத்திரம் தான் இருக்கும்.
(பொகவந்தலாவ நிருபர். எஸ்.சதீஸ்)