மழை காலத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டு மாணவர்கள் போக்குவரத்தை மேற்கொள்ள முடியாத நிலையில் காணப்பட்ட மொரகொல்ல பாடசாலைக்கான பாதையை இ.தொ.கா வின் உபத் தலைவரும் பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் புனரமைத்து கொடுத்துள்ளார்.
மாணவர்களே நாட்டின் நாளைய சொத்துக்கள். மாணவர்களை பாதுகாத்து அவர்களை வழிநடத்த வேண்டியது நமது பொறுப்பாகும்.
மொரகொல்ல பாடசாலைக்கான பாதை மழை காலப்பகுதியில் பாதிக்கப்பட்டு வழுக்கும் காரணத்தினால் மாணவர்கள் பாடசாலைக்கு நடந்து செல்ல முடியாத சூழல் தொடர்ந்து காணப்பட்டது.
இது குறித்து அதிபர்,ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் செந்தில் தொண்டமானிடம் முன்வைத்த கோரிக்கையின் பிரகாரம் இப்பாதை புனரமைக்கப்பட்டு மாணவர்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
செந்தில் தொண்டமானின் விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.