மொஸ்கோவில் குண்டுவெடிப்பு – மூவர் உயிரிழப்பு!

0
73

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் பொலிஸ் அதிகாரி இருவர் உள்ளிட்ட 3 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் மொஸ்கோ தெற்குப்பகுதியில் யெலெட்ஸ்கயா என்ற தெருவில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரிடம், அவ்வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இவ் விசாரணையின் போது திடீரென் பலத்த சத்தத்துடன் குண்டுவெடித்ததோடு குறித்த சம்பவத்தில் இரு பொலிஸ் அதிகாரிகளும் பலத்த காயமடைந்து பின்னர் உயிரிழந்ததோடு அங்கிருந்த ஒருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தையடுத்து பொலிஸ் அதிகாரிகளைக் கொலை செய்ய முயன்றது மற்றும் சட்டவிரோத வெடிபொருட்கள் கடத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் ரஷ்யாவின் புலனாய்வுக் குழு வழக்குப் பதிவு செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here