இலங்கை கம்னியூட் கட்சியின் நீண்டகால உறுப்பினரும் ஹட்டன்- டிக்கோயா நகரசபை உறுப்பினருமான மோகன் சுப்ரமணியத்தின் இழப்பு மலையக சமூகத்தின் பேரிழப்பாகும் என மலையக மக்கள் மூன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே.ராதாகிருஸ்ணன் இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.
64ஆவது வயதில் காலமாகியுள்ள மோகன் சுப்ரமணியம் சிறந்த இடதுசாரி கொள்கைவாதி.தன் இறுதி மூச்சுவரை தன்நிலை மாறாது காணப்பட்டவர். மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் பொது உடமை உரிமைகளுக்குத் துணிந்து குரல் எழுப்பியவர்.எங்கெங்கு மலையக மக்களுக்கு அநீதீ நடக்கின்றதோ அதற்காக முன்னின்று குரல் எழுப்பியவர் அதை தட்டிக்கேட்ட சமூக சீர்த்திருத்தவாதி.இவரின் இழப்பு ஒட்டு மொத்த மலையகத்துக்கும் மிகப்பெரிய இழப்பாகும்.
அரசியல்,கலை,கல்வி, கலாச்சாரம்,சமூகசேவை என பல துறையிலும் தன்னை வளர்த்துக்கொண்டு ஆற்றல் மிகு மனிதராக காணப்பட்ட மோகன் சுப்பிரமணியத்தின் ஆன்மா சாந்தியடைவதோடு அவரின் பிரிவால் வாடும் குடும்பத்திற்கும் சமூகத்திற்கு தன் அனுதாபத்தை தெரிவித்து கொள்வதாக வே.ராதாகிருஸ்ணன் குறிப்பிட்டார்.